/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ராமகிருஷ்ணாவுக்கு சிறந்த மருத்துவமனை விருது
/
ஸ்ரீ ராமகிருஷ்ணாவுக்கு சிறந்த மருத்துவமனை விருது
ADDED : மே 04, 2025 10:55 PM

கோவை, ;எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழகத்தின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது.
நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை, சிகிச்சை முறைகளை அறிமுகம் செய்து, உயர்தரமான சிகிச்சைகளை வழங்குவதால், பல ஆண்டுகளாக பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த, இந்திய ஹெல்த் மாநாடு 2025 தென்னக பதிப்பு நிகழ்வில், கொங்கு மண்டலத்தின் சிறந்த பல்நோக்கு மருத்துவமனை என்ற விருது, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
விருதை, தெலுங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் மற்றும் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் பெற்றுக்கொண்டனர்.