/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில் ஆண்டு விழா
/
ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில் ஆண்டு விழா
ADDED : ஜன 30, 2024 10:21 PM

சூலூர்:தேவராயன்பாளையம் ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண சுவாமி கோவில் ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த தேவராயன்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவில், ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண சுவாமி கோவில் பழமையானவை. இங்கு, நான்காம் ஆண்டு விழா நேற்று காலை நடந்தது. 8:00 மணிக்கு விநாயகர் கோவிலில் ஆண்டு விழா ஹோமம் நடந்தது. தொடர்ந்து, விநாயகருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து, காலை,10:00 மணிக்கு, ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில், சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பல்வேறு திரவியங்களால், பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் மக்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.