ADDED : மே 23, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : வடவள்ளி, நியூ தில்லை நகரை சேர்ந்தவர் பெருமாள்; மனைவி சின்னம்மாள், 65. கடந்த 21ம் தேதி மதியம், சின்னம்மாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த போது, வாலிபர் ஒருவர் வீட்டின் மேல் நின்று கொண்டு, கூரையை உடைத்துக்கொண்டிருந்தார்.
இதை பார்த்த சின்னம்மாள், வாலிபரை கண்டித்து, கீழே இறங்கும்படி கூறினார். கீழே இறங்கிய வாலிபர், தகாத வார்த்தைகளால் திட்டி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சின்னம்மாளின் தலையில் குத்தினார்.
சின்னம்மாள் அளித்த புகாரில் வடவள்ளி போலீசார் வடள்ளி, நியூ தில்லை நகரை சேர்ந்த டேவிட்ராஜா, 21 என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.