/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யோகி பேச்சுக்கு ஸ்டாலின் பதில்
/
யோகி பேச்சுக்கு ஸ்டாலின் பதில்
ADDED : மார் 28, 2025 02:59 AM
சென்னை:'நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; திணிப்பையும், ஆதிக்கத்தையும் தான் எதிர்க்கிறோம்' என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
அவரது சமூக வலைதள பதிவு:
இரு மொழி கொள்கையிலும், நியாயமான மறுசீரமைப்பு கோரிக்கையிலும், தமிழகத்தின் நியாயமான, உறுதியான குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கிறது. இதனால், பா.ஜ., நிலைகுலைந்து போயுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. வேண்டுமானால், அக்கட்சித் தலைவர் அளிக்கும் பேட்டிகளை பாருங்கள்.
அதிலும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 'வெறுப்பு கூடாது' என நமக்கு பாடம் எடுக்க வந்துள்ளார். வெறுப்பு பற்றி இவர் பேசுவது நகைமுரண் மட்டுமல்ல; அரசியலின் ஆகச்சிறந்த அவல நகைச்சுவை இது.
நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; திணிப்பையும், ஆதிக்கத்தையும் எதிர்க்கிறோம். ஓட்டுக்காக கலவரம் செய்வதல்ல எங்கள் அரசியல். மாண்புக்கும், நீதிக்குமான உரிமைப்போர் எங்களுடையது.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

