/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்
ADDED : ஆக 11, 2025 11:13 PM
பெ.நா.பாளையம்; கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட, 8 மற்றும், 13 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களுக்காக 'உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிகழ்ச்சிக்கு கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமை வகித்தார்.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனவே இது தொடர்பான, 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முகாமிலும், மகளிர் உரிமைத் தொகை பெற வரும் பெண்களுக்கு சிறப்பு பகுதி அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில், நகராட்சி துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், ஆணையர் மதுமதி, தாசில்தார் விஜயரங்க பாண்டியன், துணை தாசில்தார் சசிகுமார், வருவாய் ஆய்வாளர் ஜெயவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.