/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிறுத்திய ரயில் சேவையை துவக்குங்கள்! கோவை எம்.பி., வலியுறுத்தல்
/
நிறுத்திய ரயில் சேவையை துவக்குங்கள்! கோவை எம்.பி., வலியுறுத்தல்
நிறுத்திய ரயில் சேவையை துவக்குங்கள்! கோவை எம்.பி., வலியுறுத்தல்
நிறுத்திய ரயில் சேவையை துவக்குங்கள்! கோவை எம்.பி., வலியுறுத்தல்
ADDED : மே 08, 2025 12:55 AM
கோவை; ரயில்வே அதிகாரிகள் மற்றும் எம்.பி.,க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், கோவைக்கான தேவைகள் வலியுறுத்தப்பட்டன.
சேலம் கோட்ட ரயில்வே துறைக்கு உட்பட்ட எம்.பி.,க்கள் உடனான ஆலோசனை கூட்டம், சேலம் கோட்ட ரயில்வே அலுவலகத்தில் நடந்தது; தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை வகித்தார். சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்கா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதுதொடர்பாக, கோவை எம்.பி., ராஜ்குமார் கூறியதாவது:
ஆண்டுக்கு ரூ.320 கோடி வரை கோவை ரயில்வே ஸ்டேஷன் வருவாய் ஈட்டித் தருகிறது.
அதற்கேற்ப எந்த வசதியும் ஏற்படுத்தித் தருவதில்லை. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.
இருகூர், சிங்காநல்லுார் ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து திருப்பூருக்கு பலரும் பணிக்குச் செல்கின்றனர்.
இங்கு ரயில்கள் நிறுத்தப்படாததால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே நிலை நீடித்தால், மக்களுடன் இணைந்து நாங்களும் போராட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என கூறினோம்.
சிங்காநல்லுாரில், கோவை - நாகர்கோவில், பாலக்காடு - திருச்சி ஆகிய ரயில்கள் நிறுத்தப்பட வேண்டும். நிறுத்தப்பட்ட கோவை - சேலம் ரயில் மீண்டும் இயக்க வேண்டும்.
இருகூரில் உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். சிங்காநல்லுார் ரயில்வே ஸ்டேஷனை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; ரயில்கள் நிறுத்தப்படாததால், நடைபயிற்சி தளமாக மாறியுள்ளது.
கோவை ரயில்வே ஸ்டேஷனில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க கோவை போத்தனுார், கோவை சந்திப்பு, வடகோவை ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை - திருச்செந்துார், கோவை - ராமேஸ்வரம், கோவை - திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில்கள் இயக்க வேண்டும். போத்தனுாரில் ரயில் பராமரிப்புக்கான பிட் லைன் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு, அவர் கூறினார்.