/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில சாகச பயிற்சி முகாம்: சிக்கண்ணா மாணவர் தேர்வு
/
மாநில சாகச பயிற்சி முகாம்: சிக்கண்ணா மாணவர் தேர்வு
மாநில சாகச பயிற்சி முகாம்: சிக்கண்ணா மாணவர் தேர்வு
மாநில சாகச பயிற்சி முகாம்: சிக்கண்ணா மாணவர் தேர்வு
ADDED : ஆக 19, 2025 09:40 PM
- நமது நிருபர் -
மாநில சாகச பயிற்சி முகாமுக்கு, சிக்கண்ணா அரசு கல்லுாரி மாணவர் தேர்வ செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், மாநில அளவிலான சாகச பயிற்சி முகாம், கடந்த 18 ம் தேதி துவங்கி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பல் கலைக்கழகங்களில் இருந்து 130 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில், பங்கேற்க பாரதியார் பல்கலையில் இருந்து, எட்டு பேர் (தலா, நான்கு மாணவ, மாணவியர்) தேர்வு செய்யப்பட்டனர்.
அதில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு-2ஐ சேர்ந்த மாணவர் கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், இம்மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல்லுாரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.