/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கூடைப்பந்து; திறமை காட்டியது கோவை அணி
/
மாநில கூடைப்பந்து; திறமை காட்டியது கோவை அணி
ADDED : அக் 07, 2025 11:23 PM

கோவை; மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டிகள், கோவை நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் ஏழு நாட்கள் நடந்தன. மாவட்ட கூடைப்பந்து சங்கம் நடத்திய இப்போட்டியில், 38 மாவட்டங்களின் அணிகள் பங்கேற்றன.
'நாக் அவுட்' முறையிலான போட்டிகளை அடுத்து 'லீக்' முறையில் போட்டிகள் இடம்பெற்றன. மாணவர்கள் பிரிவில், கோவை மாவட்ட அணி, 108-98 என்ற புள்ளிகளில் தேனி மாவட்ட அணியை வென்றது. திருவள்ளூர் அணி, 83-80 என்ற புள்ளிகளில், சென்னை அணியை வென்றது.
தொடர்ந்து, சென்னை அணி, 97-87 என்ற புள்ளிகளில் கோவை அணியையும், திருவள்ளூர் அணி, 64-56 என்ற புள்ளிகளில் தேனி அணியையும், தேனி அணி, 83-73 என்ற புள்ளிகளில் சென்னை அணியையும், கோவை அணி, 97-96 என்ற புள்ளிகளில் திருவள்ளூர் அணியையும் வென்றன. தொடர்ந்து நடந்த போட்டிகளின் நிறைவில், கோவை, திருவள்ளூர், தேனி, சென்னை ஆகிய அணிகள், முதல் நான்கு இடங்களை பிடித்தன.
மாணவியருக்கான 'லீக்' போட்டியில், துாத்துக்குடி அணி, 73-63 என்ற புள்ளிகளில் சென்னை அணியை வென்றது.
கோவை அணி, 71-58 என்ற புள்ளிகளில் சேலம் அணியையும், துாத்துக்குடி அணி, 79-42 என்ற புள்ளிகளில் சேலம் அணியையும், சென்னை அணி, 73-61 என்ற புள்ளிகளில் கோவை அணியையும், கோவை அணி, 68-65 என்ற புள்ளிகளில் துாத்துக்குடி அணியையும், சென்னை அணி, 66-49 என்ற புள்ளிகளில், சேலம் அணியையும் வென்றன.
தொடர்ந்து நடந்த போட்டிகளின் நிறைவில், துாத்துக்குடி, சென்னை, கோவை, சேல ம் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.