/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கராத்தே; மாணவர்கள் வெற்றி
/
மாநில கராத்தே; மாணவர்கள் வெற்றி
ADDED : டிச 03, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை தன்னார்வலர் சுரேஷ்குமார் என்பவரால், கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், வி.எஸ்.டி., மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி பள்ளி சார்பில், மாநில அளவிலான கராத்தே போட்டி, பொள்ளாச்சி - உடுமலை ரோடு சரோஜினி மஹாலில் நடந்தது.
அதில், ராமகிருஷ்ணா நகர் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் பூங்கொடி, பயிற்சியாளர் சுரேஷ்குமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.