/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான தடகளம்; கோவை அணி முதலிடம்
/
மாநில அளவிலான தடகளம்; கோவை அணி முதலிடம்
ADDED : பிப் 25, 2024 11:01 PM

கோவை;தமிழ்நாடு தடகள சங்கத்தின், இரண்டாம் ஆண்டு 'தமிழ்நாடு மாநில மத்திய மற்றும் நீண்ட துார தடகள சாம்பியன்ஷிப்' போட்டிகள், கோவை நேரு ஸ்டேடியத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தன.
இதில் பல்வேறு எடைப்பிரிவுகளில், 800மீ., 2000மீ., 3000மீ., 1500மீ., 10,000மீ., 5கிமீ., நடையோட்டம், 3 கிமீ., நடையோட்டம், ஓட்டம், 10 கிமீ., நடையோட்டம் போன்ற மத்திய மற்றும் நீண்ட துார தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.
மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் போட்டியிட்டனர். இதில் கோவையை சேர்ந்த ஜெனசிஸ் பவுண்டேஷன் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
இரண்டாமிடத்தை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியும், மூன்றாமிடத்தை பெர்பாமன்ஸ் அதலெடிக் கிளப் அணியும் பிடித்தன.
வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

