/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான போட்டிகள் ;பி.எஸ்.ஜி., கல்லூரியில் துவக்கம்
/
மாநில அளவிலான போட்டிகள் ;பி.எஸ்.ஜி., கல்லூரியில் துவக்கம்
மாநில அளவிலான போட்டிகள் ;பி.எஸ்.ஜி., கல்லூரியில் துவக்கம்
மாநில அளவிலான போட்டிகள் ;பி.எஸ்.ஜி., கல்லூரியில் துவக்கம்
ADDED : பிப் 28, 2024 12:39 AM

கோவை;பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி சார்பில், மாநில அளவிலான 39வது ஆண்டு இறகுப்பந்து போட்டி, 45வது ஆண்டு பூப்பந்து மற்றும் 50வது ஆண்டு டேபிள் டென்னிஸ் போட்டி நேற்று, இன்று இரண்டு நாட்கள் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.
இதில், மாணவ மாணவியருக்கு இறகுப்பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளும், மாணவர் பிரிவு பூப்பந்து போட்டியும் நடத்தப்படுகின்றன. சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று நடந்த போட்டி முடிவுகள்
மாணவர் பிரிவு இறகுப்பந்து நாக் அவுட் சுற்றில், பி.எஸ்.ஜி., கல்லுாரியின் ஸ்ரீவர்சன் 30 - 4 என்ற புள்ளிக்கணக்கில் சி.ஐ.டி., கல்லுாரி சோமேசையும், ஜமால் முகமது கல்லுாரியின் லோகேஷ் 30 - 17 என்ற புள்ளிக்கணக்கில், கே.பி.ஆர்., கல்லுாரி அருணையும், கே.பி.ஆர்., யோகேஷ் 30 - 18 என்ற புள்ளிக்கணக்கில் ஜமால் முகமது கல்லுாரி வீரசபாபதியையும் வீழ்த்தினர்.
மாணவர் பிரிவு பூப்பந்து போட்டியில், பி.எஸ்.ஜி., அணி 2 - 0 என்ற செட் கணக்கில் மாருதி உடற்கல்வியியல் கல்லுாரியையும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி 2 - 0 என்ற செட் கணக்கில் ஏ.வி.எஸ்., கல்லுாரியையும், சென்னை செயின்ட் ஜோசப் அணி 2 - 1 என்ற கணக்கில் ஜி.டி.ன்., கல்லுாரியையும், ஜமால் முகமது கல்லுாரி அணி 2 - 0 என்ற செட் புள்ளிக்கணக்கில் லயோலா கல்லுாரியையும் வீழ்த்தின.

