/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில 'சப் ஜூனியர்' கால்பந்து; மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு
/
மாநில 'சப் ஜூனியர்' கால்பந்து; மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு
மாநில 'சப் ஜூனியர்' கால்பந்து; மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு
மாநில 'சப் ஜூனியர்' கால்பந்து; மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு
ADDED : ஜூலை 09, 2025 10:27 PM
கோவை; தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில், சப் ஜூனியர் மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வரும், 17 முதல், 20ம் தேதி வரை புதுக்கோட்டையில் நடக்கிறது. இந்நிலையில், கோவை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு, அண்ணா பல்கலை மண்டல மைய கால்பந்து மைதானத்தில் நடந்தது.
இதில், பொள்ளாச்சி, ஆனைமலை, மேட்டுப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 234 வீரர்கள் கலந்துகொண்டனர். வீரர்களின் போட்டித்திறன் அடிப்படையில், 45 பேர் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில், 26 பேர் இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்படுவர். தொடர்ந்து, 15ம் தேதி இந்த, 26 வீரர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள், 20 பேர் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு வரும், 17ம் தேதி அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, கோவை மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் அனில் குமார் தெரிவித்தார்.