/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமநாதபுரம் ராணுவ வீரருக்கு ஐதராபாதில் சிலை திறப்பு
/
ராமநாதபுரம் ராணுவ வீரருக்கு ஐதராபாதில் சிலை திறப்பு
ராமநாதபுரம் ராணுவ வீரருக்கு ஐதராபாதில் சிலை திறப்பு
ராமநாதபுரம் ராணுவ வீரருக்கு ஐதராபாதில் சிலை திறப்பு
ADDED : பிப் 26, 2024 04:13 AM

ராமநாதபுரம் : தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள ராணுவ வீரர் பீரங்கி பயிற்சி மைதானத்திற்கு, கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த, 'வீர் சக்ரா' விருது பெற்ற, ராமநாதபுரம் ராணுவ வீரர் ஹவில்தார் கே.பழனியின் பெயர் சூட்டப்பட்டு, அங்கு அவருக்கு மார்பளவு வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
திருவாடானை அருகே கடுக்களுர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 40. இவர் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றிய நிலையில், 2020 ஜூன் 15ல், சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், வீர மரணம் அடைந்தார்.
தீரத்துடன் போரிட்ட இவரின் வீர தீரச் செயலை கவுரவிக்கும் விதமாக, 2021ல் ராணுவத்தின் உயரிய விருதான, வீர் சக்ரா வழங்கப்பட்டது. டில்லி, இந்தியா கேட்டில் உள்ள போர் வீரர்கள் நினைவு ஸ்துாபியிலும், பழனியின் பெயர் பொறிக்கப்பட்டது. அதே ஆண்டில் பிப்., 8ல் அவர் பணி புரிந்த அலகாபாத் ராணுவ மையத்தில் அவரது பெயரில் நினைவு அரங்கம், மார்பளவு வெண்கலச் சிலை திறக்கப்பட்டது.
இந்நிலையில், பீரங்கி இயக்குவதில் திறமை மிக்க அவர், பீரங்கி பயிற்சி பெற்ற ஐதராபாத்தில் உள்ள மைதானத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டு, அவரது மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழா, 22ல் நடந்தது.
இதில் மையத்தின் டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் அதோஸ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், பழனியின் மனைவி வானதி தேவி, மகன் பிரசன்னா, மகள் திவ்யா மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
வானதி தேவி கூறுகையில், ''என் கணவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாகவும், பயிற்சி பெறும் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் பீரங்கி மைதானத்திற்கு அவரது பெயரும் சிலையும் வைத்துள்ளனர். இதை, நம் நாட்டிற்காக அவர் செய்த சேவைக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்,'' என்றார்.

