/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளரை சரிபார்த்து ஸ்டிக்கர்; அ.தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தல்
/
வாக்காளரை சரிபார்த்து ஸ்டிக்கர்; அ.தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தல்
வாக்காளரை சரிபார்த்து ஸ்டிக்கர்; அ.தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தல்
வாக்காளரை சரிபார்த்து ஸ்டிக்கர்; அ.தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தல்
ADDED : ஆக 14, 2025 08:54 PM

கோவை; கோவை ஹுசூர் ரோட்டில் அமைந்துள்ள இதயதெய்வம் மாளிகையில், மாவட்டக் கழகம் சார்பில், தேர்தல் வியூக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ச்சுணன், ஜெயராம் உள்ளிட்டோர் பங்கேற்று, நிர்வாகிகளுக்கு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.
பூத் வாரியாக வாக்காளர்களைக் கணக்கெடுத்து, சரிபார்த்து, வீடுகளின் கதவுகளில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். தி.மு.க.,வினர் ஓட்டுகளில் முறைகேடு செய்யாமல் இருக்க விழிப்போடு இருக்க வேண்டும்.
போலி வாக்காளர்களை அடையாளம் காண வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, கதவுகளில் ஒட்டுவதற்கான ஸ்டிக்கர்கள், பூத் கமிட்டியினருக்கும், நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டது.
மாவட்ட, கிளைக்கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.