/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சளி, காய்ச்சல் பாதிப்பு சிகிச்சைக்கு மருந்து தேவைக்கேற்ப இருப்பு வைப்பு
/
சளி, காய்ச்சல் பாதிப்பு சிகிச்சைக்கு மருந்து தேவைக்கேற்ப இருப்பு வைப்பு
சளி, காய்ச்சல் பாதிப்பு சிகிச்சைக்கு மருந்து தேவைக்கேற்ப இருப்பு வைப்பு
சளி, காய்ச்சல் பாதிப்பு சிகிச்சைக்கு மருந்து தேவைக்கேற்ப இருப்பு வைப்பு
ADDED : மே 29, 2025 11:25 PM
பொள்ளாச்சி,; 'அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், சளி, காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது,' என, பொதுசுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், தென்மேற்கு பருவழை துவங்கி உள்ளது. பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கேற்ப சிகிச்சை அளிக்கும் வகையில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அளவிலான மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, காய்ச்சல் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுச்சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
மழையின் தாக்கம் அதிகரித்தாலும், பேரிடர் பாதிப்பு ஏதும் கிடையாது. இருப்பினும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் விபத்து சிகிச்சை அளிக்கும் வகையில், ஒவ்வொரு பகுதியிலும், மருந்துகளை உள்ளடக்கிய டாக்டர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
அதேநேரம், இரு மாதங்கள் மழையின் தாக்கம் அதிகரிக்கும் போது, தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும் 'ஏடிஸ்' கொசுக்கள், மழை காலத்தில் அதிகம் உற்பத்தியாகும்.
இக்காலகட்டத்தில், டெங்கு பரவலால் மக்கள் பாதிப்பதை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக 'ஓசல்டாமிவிர்' மாத்திரை, தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமலுக்கான டி.பி.டி., தடுப்பூசிகள், ஓ.ஆர்.எஸ்., உப்பு, சர்க்கரை கரைசல், கிருமித் தொற்றுக்கான 'அசித்ராமைசின்' மாத்திரைகள் தருவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, கூறினர்.