தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிடப்பில் புறக்காவல் நிலையங்கள் திட்டம்: குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம்

கிடப்பில் புறக்காவல் நிலையங்கள் திட்டம்: குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம்

கிடப்பில் புறக்காவல் நிலையங்கள் திட்டம்: குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம்


UPDATED : நவ 18, 2026 07:10 PM

ADDED : நவ 18, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 07:10 PM ADDED : நவ 18, 2026 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:

உடுமலை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட தளி மற்றும் குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளை சீரமைத்து, புறக்காவல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

உடுமலை காவல் உட்கோட்டத்தின் கீழ், உடுமலை நகரம், தளி, குடிமங்கலம், அமராவதி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தளி மற்றும் குடிமங்கலம் காவல் நிலையங்களின் எல்லைப்பகுதிகள் நிலப்பரப்பு ரீதியாக மிகப்பரிய கிராமப்புற மற்றும் மலைக் கிராமங்களை உள்ளடக்கியவையாகும்.

குறிப்பாக, தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ஏதேனும் அசம்பாவிதம் அல்லது புகார் அளிக்க வேண்டுமென்றால், சுமார் 15 முதல் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தளி காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

அதேபோல், குடிமங்கலம் காவல் நிலைய எல்லையில் அமைந்துள்ள, முக்கிய வர்த்தகச் சந்தைப் பகுதியான பெதப்பம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள குடிமங்கலம் ஒன்றிய கிராம மக்களும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

எல்லைப் பகுதிகள் மிகப்பரந்து காணப்படுவதால், தளி மற்றும் குடிமங்கலம் காவல் நிலைய அதிகாரிகளால் அனைத்துப் பகுதிகளுக்கும் உடனுக்குடன் ரோந்து செல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் நிலவுகின்றன.

இதைப் பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தேவனூர்புதூர் மற்றும் பெதப்பம்பட்டி ஆகிய இரண்டு பகுதிகளுமே நூற்றுக்கணக்கான கிராமங்களை இணைக்கும் முக்கியச் சந்திப்புகளாகவும், விவசாய மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகள் நிறைந்த இடங்களாகவும் திகழ்கின்றன. இங்கு தனியாகப் புறக்காவல் நிலையங்கள் அமைத்து, சுழற்சி முறையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தினால் மட்டுமே, குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், அவசரக் காலங்களில் காவல் துறையின் சேவையை விரைவாகப் பெறவும் மாவட்ட காவல் நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தேவனூர்புதூர் மற்றும் பெதப்பம்பட்டியில் புதிய புறக்காவல் நிலையங்களை அமைக்க முன்வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us