/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் குப்பை கிடங்கில் தெருநாய் கருத்தடை மையம்
/
வெள்ளலுார் குப்பை கிடங்கில் தெருநாய் கருத்தடை மையம்
வெள்ளலுார் குப்பை கிடங்கில் தெருநாய் கருத்தடை மையம்
வெள்ளலுார் குப்பை கிடங்கில் தெருநாய் கருத்தடை மையம்
ADDED : மார் 09, 2024 10:48 PM
கோவை:வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில், ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் தெருநாய் கருத்தடை சிகிச்சை மையம் கட்டுவதற்கு, நேற்று பூமி பூஜை போடப்பட்டது.
உங்கள் தொகுதியில் முதல்வர் 2023-24 திட்டத்தில்,கோவை மாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில், ரூ.65 லட்சம் செலவில், தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும், அறுவை சிகிச்சை மையம் கட்டப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் துவக்கி வைத்தனர்.
முன்னதாக, 97வது வார்டு, ஈச்சனாரி ஐயப்பா நகரில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடத்தை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சிகளில், ஆளுங்கட்சி கவுன்சில் குழு தலைவர் கார்த்திகேயன், உதவி நிர்வாக பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர்கள் சபரிராஜ், சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

