/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
/
ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
ADDED : மார் 21, 2025 10:18 PM
வால்பாறை; வால்பாறை அஞ்சலகத்தில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறையில் பல்வேறு தேயிலை எஸ்டேட்களில், வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர் வாடிக்கையாளர்கள் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு துவங்கியுள்ளதோடு, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களிலும் இணைந்துள்ளனர்.
இது தவிர, ரயில்வே டிக்கெட் முன்பதிவு, ஆதார் பதிவுக்கு, வால்பாறை நகரில் உள்ள அஞ்சலகத்தை தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த, 10 நாட்களுக்கு மேலாக அஞ்சலகத்தில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதில்லை. இதனால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறை அஞ்சலகத்தில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு மற்றும் ஆதார் பதிவு கடந்த, 10 நாட்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், வெளியூர் செல்ல ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமலும், ஆதார் பதிவு செய்ய முடியாமலும் நாள் தோறும் தவிக்கின்றோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
அஞ்சலக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஊழியர் பற்றாக்குறையினால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆதார் பதிவு செய்ய ஆட்கள் நியமிக்கப்படவில்லை. ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் ஊழியர் விடுமுறையில் உள்ளார்.
இங்குள்ள, ஏழு கவுன்டருக்கு, 3 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் பணிகள் பாதிக்கப்படுவதோடு, வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் சேவை செய்ய முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்ப, உயர்அதிகாரிகளுக்குபரிந்துரை செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.