ADDED : நவ 20, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், சூலக்கல்,மேற்கு வீதி சேர்ந்த ஜீவஹரிஹரன், 18 என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவர் பைக்கில், கோவை - பொள்ளாச்சி தேசிய நெ டுஞ் சாலையில், மலுமிச்சம்பட்டி சர்வீஸ் சாலையில் ஒத்தக்கால்மண்டபம் நோக்கி சென்றார். எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.
சாலையில் விழுந்த ஜீவ ஹரிஹரன் படுகாயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த டாக்டர்கள், ஜீவஹரிஹரன் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். செட்டிபாளையம் போலீ சார் விசாரிக்கின்றனர்.

