/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசுப் பள்ளிகளில் 'சூடுபிடித்தது' மாணவர்கள் சேர்க்கை; இம்மாதம் மட்டும், 5,866 பேர்; ஈர்க்கும் இணைசெயல்பாடுகள்
/
அரசுப் பள்ளிகளில் 'சூடுபிடித்தது' மாணவர்கள் சேர்க்கை; இம்மாதம் மட்டும், 5,866 பேர்; ஈர்க்கும் இணைசெயல்பாடுகள்
அரசுப் பள்ளிகளில் 'சூடுபிடித்தது' மாணவர்கள் சேர்க்கை; இம்மாதம் மட்டும், 5,866 பேர்; ஈர்க்கும் இணைசெயல்பாடுகள்
அரசுப் பள்ளிகளில் 'சூடுபிடித்தது' மாணவர்கள் சேர்க்கை; இம்மாதம் மட்டும், 5,866 பேர்; ஈர்க்கும் இணைசெயல்பாடுகள்
ADDED : மார் 25, 2025 06:25 AM
கோவை; அரசு, மாநகராட்சி ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் இணை செயல்பாடுகள், நலத்திட்டங்களின் ஈர்ப்பால் இம்மாதம் மட்டும், 5,866 மாணவர்கள்சேர்க்கை புரிந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 1,210 அரசுப் பள்ளிகள், 177 அரசு உதவி பெறும் பள்ளிகள் என, 1,387 பள்ளிகள் உள்ளன. தவிர, 148 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப் படுகின்றன.
மாணவர்களுக்கு சீருடை, லேப்டாப்,சைக்கிள், சத்துணவு திட்டத்தில் ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, காலை நேர சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி பாடங்கள், தனித்தனியே பயிற்றுவிக்கப்படுவதும் கூடுதல் சிறப்பு. இதனால், நடப்பு, 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, அரசுப் பள்ளிகளில் மாணவர், பெற்றோரிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. அரசு, மாநகராட்சிபள்ளிகளில் கடந்த, 1 முதல் இதுவரை, 5,866 மாணவர்கள் சேர்க்கை புரிந்துள்ளனர்.
அரசுப் பள்ளியில் 1,866 பேர்!
மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாவட்டத்தில் தொண்டாமுத்துார், பேரூர், பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம் உட்பட எட்டு ஒன்றியங்கள் உள்ளன. இதில், 282 ஆரம்பப்பள்ளிகள், 96 நடுநிலைப்பள்ளிகள் உள்ள நிலையில் கடந்த, 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
கடந்த, 21ம் தேதி வரை எல்.கே.ஜி., வகுப்பில், 173 பேர், யு.கே.ஜி.,யில், 91, ஒன்றாம் வகுப்பில் தமிழ் வழியில், 792, ஆங்கில வழியில், 701, இரண்டாம் வகுப்பில் தமிழில், 8, ஆங்கிலத்தில், 15, மூன்றாம் வகுப்பில் தமிழில், 9, ஆங்கிலத்தில், 22, நான்காம் வகுப்பில் தமிழில், 5, ஆங்கிலத்தில், 8, ஐந்தாம் வகுப்பில் தமிழில் ஒருவர், ஆங்கிலத்தில், 10 பேர் சேர்க்கை புரிந்துள்ளனர்.
ஆறாம் வகுப்பில் தமிழில், 11, ஆங்கிலத்தில், 8, ஏழாம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தலா இருவர், எட்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் எட்டு பேர் என, 1,866 பேர் கடந்த, 21ம் தேதி வரை சேர்க்கை புரிந்துள்ளனர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு, மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. தேர்வுகள் முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.