UPDATED : நவ 06, 2026 07:05 PM
ADDED : நவ 05, 2026 04:14 PM

கோவை: மான்செஸ்டர் சர்வதேசப் பள்ளியின் சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.பி பிரிவுகளில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா நடந்தது. சி.பி.எஸ்.இ பிரிவு விழாவில் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி மகேந்திர வர்மன், ஐ.பி பிரிவு விழாவில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநில முன்னாள் செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.மாணவர் தலைவர், துணைத் தலைவர்கள், அணித் தலைவர்கள் உள்ளிட்ட பல பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பதவிச் சின்னங்கள் அணிவிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், மாணவர்கள் தலைமைத்துவம், ஒழுக்கம், நேர்மை, பொறுப்புணர்வு, மனிதநேயம் மற்றும் சமூக அக்கறையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.பள்ளித் தலைவர் மூர்த்தி, தாளாளர் பிரியா ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர். கல்வியுடன் தலைமைப் பண்புகளையும் வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்தில் சமூகத்துக்கும் நாட்டுக்கும் சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
