/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஸ்டார் ஆப் தி மந்த்' சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கி ஊக்கம்
/
'ஸ்டார் ஆப் தி மந்த்' சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கி ஊக்கம்
'ஸ்டார் ஆப் தி மந்த்' சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கி ஊக்கம்
'ஸ்டார் ஆப் தி மந்த்' சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கி ஊக்கம்
ADDED : ஜூலை 08, 2025 10:02 PM

கோவை; மாணவர்களின் தலைமைத்துவ பண்புகள் மற்றும் ஒழுக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், கோவை காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களின் செயற்பாடுகள் பத்து பிரிவுகளில் 50 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்படுகிறது.
இதில், பாடநெறி, வகுப்பு நடத்தை, கேள்விக்கு அளிக்கும் பதில்கள், உடுத்தும் உடை, நேரத்திற்கு வருகை, விளையாட்டு மற்றும் பணி ஒழுங்கு உள்ளிட்ட அம்சங்கள், அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், சிறந்த முறையில் செயல்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும், 'ஸ்டார் ஆப் தி மந்த்' எனும், சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி கூறுகையில், ''வகுப்பில் மாணவர்கள் ஒழுக்கம், திறனும் கொண்டவர்களாக வளர, இது போன்ற செயல்முறைகள் பெரிதும் உதவுகின்றன. அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும், சிறந்த வழியாக இது அமைவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடங்களையும், விளையாட்டு போன்ற இதர துறைகளிலும் கவனம் செலுத்துகின்றனர்,'' என்றார்.

