/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை ஜீவாமிர்தம் தயாரிக்க மாணவர்கள் செயல் விளக்கம்
/
இயற்கை ஜீவாமிர்தம் தயாரிக்க மாணவர்கள் செயல் விளக்கம்
இயற்கை ஜீவாமிர்தம் தயாரிக்க மாணவர்கள் செயல் விளக்கம்
இயற்கை ஜீவாமிர்தம் தயாரிக்க மாணவர்கள் செயல் விளக்கம்
ADDED : செப் 08, 2025 10:45 PM
கோவில்பாளையம்; இயற்கை முறையில் ஜீவாமிர்தம் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
சர்க்கார் சாமக்குளம் வட்டார வேளாண் அலுவலகத்தில், 'உழவரைத் தேடி' திட்டத்தின் கீழ், விவசாய செயல் விளக்க முகாம் நடந்தது. இதில் காருண்யா பல்கலை வேளாண் மாணவர்கள், விவசாயிகளுக்கு பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இயற்கை முறையில் ஜீவாமிர்தம் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி கரைசல் தயாரிப்பதை செய்து காண்பித்தனர்.
தென்னையில் அதிக அளவில் பாதிக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த உயிர்கொல்லி என்கார்சியா மற்றும் கிரீன் லேஸ் விங்கின் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தனர். விளைச்சலை குறைக்கும் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
வேளாண் துணை இயக்குனர் நிர்மலா, உதவி இயக்குனர் நாமத்துல்லா மற்றும் வேளாண் அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.