/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வில்வித்தை போட்டியில் மாணவர்கள் அசத்தல்
/
வில்வித்தை போட்டியில் மாணவர்கள் அசத்தல்
ADDED : பிப் 12, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் மாவட்டங்களுக்கு இடையேயான வில்வித்தை போட்டி நடந்தது.
பொள்ளாச்சி அருகே பனிக்கம்பட்டியில், ஸ்ரீசாய் அகாடமி ஆப் ஸ்போர்ட்ஸ் சார்பில், மாவட்டங்களுக்கு இடையேயான வில்வித்தை போட்டி நடந்தது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச்சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், 10, 12, 14, 17 மற்றும், 19 வயதுக்குட்போருக்கான பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ்கள், கோப்பையும் வழங்கப்பட்டன.
ஸ்ரீ சாய் அகாடமி நிறுவனர் செந்தில், அமுதராணி ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.