/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாசா விஞ்ஞானியுடன் மாணவர்கள் சந்திப்பு
/
நாசா விஞ்ஞானியுடன் மாணவர்கள் சந்திப்பு
ADDED : செப் 06, 2025 11:57 PM

கோவை : கோவை மண்டல அறிவியல் மையம் சார்பில், விஞ்ஞானியுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, நாசா ஹீலியோபிஸிக்ஸ் பிரிவு கோடார்ட் விண்வெளி மைய விஞ்ஞானி கோபால்சாமி, “நாம் கற்பனையில் எவ்வளவு துாரம் வேண்டுமானாலும் செல்லலாம். அதுபோலவே, விண்வெளி ஆய்வும் துவங்கின. விண்வெளிக்குச் செல்வதற்கா ன காரணங்கள் பலவாக உள்ளன. விண்வெளி ஆய்வுகள் புதிய பொருட்கள், தாதுக்கள் மற்றும் பிற வளங்களை கண்டறிய உதவுகின்றன.
மனிதர்கள் இயற்கையாகவே ஆர்வமும், சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கும் கொண்டவர்கள். விண்வெளிப் பயணங்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் மனித இனத்தின் எதிர்காலம் ஆகிய துறைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன,” என்றார்.
மேலும், ஓரியன் விண்மீன் குழுவில் உள்ள முக்கிய வானியல் அம்சமான ஓரியன் நெபுலா பற்றியும் அவர் விளக்கினார்.
மாவட்ட அறிவியல் அலுவலர் அகிலன் கூறுகையில், “விஞ்ஞானியுடன் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஞ்ஞானிகளுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பு கிடைப்பதால், சந்தேகங்களை தெளிவுபடுத்துகின்றனர்,” என்றார்.
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.