/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கபடியில் எதிரணியை தட்டி துாக்கிய புனித மைக்கேல் பள்ளி மாணவர்கள்
/
கபடியில் எதிரணியை தட்டி துாக்கிய புனித மைக்கேல் பள்ளி மாணவர்கள்
கபடியில் எதிரணியை தட்டி துாக்கிய புனித மைக்கேல் பள்ளி மாணவர்கள்
கபடியில் எதிரணியை தட்டி துாக்கிய புனித மைக்கேல் பள்ளி மாணவர்கள்
ADDED : செப் 19, 2024 11:10 PM

கோவை : பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டியில் புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி அணி பரபரப்பாக விளையாடி முதல் பரிசு வென்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டிகள் கற்பகம் பல்கலையில் நடந்தது. இதில், 84 அணிகள் பங்கேற்றன. 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில், புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி அணியும், கலைவாணி மாடல் மேல்நிலை பள்ளி அணிகளும் மோதின.
இரு அணியினரும் சமமான திறமைகளை வெளிப்படுத்த ஆட்டம் களைகட்டியது. பரபரப்பான ஆட்டத்தில், புனித மைக்கேல் மேல்நிலை பள்ளி மாணவர்கள், 33 புள்ளிகளை குவித்தது. போராடிய கலைவாணி பள்ளி மாணவர்கள், 32 புள்ளிகள் எடுத்தனர். ஆட்ட முடிவில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி அணி முதல் பரிசை தட்டிசென்றது. அதேபோல், சின்னத்தடாகம் அரசு மேல்நிலைப் பள்ளி அணி, 26-14 என்ற புள்ளி கணக்கில் எஸ்.வி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை வென்றது.
முதலிடம் பெற்ற புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி அணியினரையும், உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளி தாளாளர் ஆரோக்கியசாமி, தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் சகாய இருதயராஜ் மற்றும் ஆசிரி யர்கள் பாராட்டி சிறப்பித்தனர்.