/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடைவிடாது சிலம்பம், கராத்தே பயிற்சி; உலக சாதனை படைத்த மாணவர்கள்
/
இடைவிடாது சிலம்பம், கராத்தே பயிற்சி; உலக சாதனை படைத்த மாணவர்கள்
இடைவிடாது சிலம்பம், கராத்தே பயிற்சி; உலக சாதனை படைத்த மாணவர்கள்
இடைவிடாது சிலம்பம், கராத்தே பயிற்சி; உலக சாதனை படைத்த மாணவர்கள்
ADDED : ஜூலை 28, 2025 09:44 PM

சூலுார்; ஐந்து மணி நேரம் இடைவிடாமல்,சிலம்பம் மற்றும் கராத்தே பயிற்சி செய்து, மாணவ, மாணவிகள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
பீடம் பள்ளி சுகப்பிரம்ம மகிரிஷி வித்யாலய இண்டர்நேஷனல் பள்ளி, ஆதி தமிழன் வீர சிலம்பாட்ட கலைக்கூடம் சார்பில், உலக சாதனை முயற்சியாக, 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், தொடர்ந்து ஐந்து மணி நேரம் சிலம்பம் சுற்றி பயிற்சி செய்து சாதனை படைத்தனர். பள்ளி முதல்வர் பிரபா துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, 1:30 மணி நேரம் தொடர்ந்து கராத்தே பயிற்சி செய்து மாணவர்கள் சாதனை படைத்தனர். பள்ளி இயக்குனர் அபி ராமன் துவக்கி வைத்தார். இந்த சாதனை முயற்சிகள், நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டு, பயிற்சி ஆசிரியர் நாகசுந்தரத்திடம் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.