/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'படிக்கும்போதே லட்சியத்தை மாணவர்கள் தீர்மானிக்க வேண்டும்'
/
'படிக்கும்போதே லட்சியத்தை மாணவர்கள் தீர்மானிக்க வேண்டும்'
'படிக்கும்போதே லட்சியத்தை மாணவர்கள் தீர்மானிக்க வேண்டும்'
'படிக்கும்போதே லட்சியத்தை மாணவர்கள் தீர்மானிக்க வேண்டும்'
ADDED : அக் 16, 2024 10:10 PM
மேட்டுப்பாளையம்: காரமடையில் உள்ள டாக்டர்.ஆர்.வி. கலை, அறிவியல் கல்லூரியில், கல்லூரி மற்றும் காரமடை கலாம் விதைகள் அறக்கட்டளையின் சார்பாக டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நேற்று முன் தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காரமடை கலாம் விதைகள் அறக்கட்டளையின் நிறுவனர் கனிஷ் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, ''டாக்டர் அப்துல்கலாம் வாழ்க்கை வரலாற்றை படித்து இன்றைய மாணவர்கள் அவர் வழியை பின்பற்றி நடக்க வேண்டும். அவருடைய நேர்மை, எளிமை, தேசப்பற்று, பழகும் தன்மை இவை அனைத்தையும் நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ வேண்டும். படிக்கின்ற காலத்தில் தங்கள் லட்சியத்தை மாணவர்கள் தீர்மானிக்க வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கி பயணித்து தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்,'' என்றார்.
இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் சி.என்.ரூபா, அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.