/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரநிலை மாதிரி வீடு மாணவர்கள் 'விசிட்'
/
தரநிலை மாதிரி வீடு மாணவர்கள் 'விசிட்'
ADDED : மார் 26, 2025 08:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பூசாரிபட்டியில் உள்ள, பொள்ளாச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், தேசிய தரநிலை அமைப்புடன் இணைந்து, துறை வாரியாக, தரநிலை அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, மாணவர்கள், அனைத்து விதமான தரநிலையை எளிதாக அறிந்தும் வருகின்றனர். அவ்வகையில், தேசிய தரநிலை அமைப்பின் கோவை கிளை அலுவலகம் சார்பில், உலக நுகர்வோர் உரிமை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
'நிலையான வாழ்க்கை முறைகளுக்கு மாறுதல்' என்ற தலைப்பில் தர நிலைகளுடன் கோவையில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வீட்டை, கல்லுாரி மாணவர்கள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் செய்திருந்தது.