/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யோகா போட்டியில் 'சாம்பியன்ஷிப்' பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்
/
யோகா போட்டியில் 'சாம்பியன்ஷிப்' பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்
யோகா போட்டியில் 'சாம்பியன்ஷிப்' பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்
யோகா போட்டியில் 'சாம்பியன்ஷிப்' பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்
ADDED : நவ 14, 2024 05:12 AM

கோவை: செட்டிபாளையம் குளோபல் பாத்வேஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த யோகா 'சாம்பியன்ஷிப்' வென்றுள்ளனர்.
கோவையில் உள்ள தனியார் மாலில் டெக்கத்லான் சார்பில் 'யோகிக் வாரியர் சாம்பியன்ஷிப்' போட்டி மாவட்ட அளவில் சமீபத்தில் நடந்தது. யோகா மற்றும் சிலம்பம் ஆகிய இரு போட்டிகளில், 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில், செட்டிபாளையம், குளோபல் பாத்வேஸ் மெட்ரிக் பள்ளியில் ஒன்று முதல் பிளஸ்2 வரை பயிலும் மாணவர்களில், 57 பேர் பங்கேற்றனர். யோகா போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை இம்மாணவர்கள் வென்றுள்ளனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.