/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அ' குறுமைய சிலம்பம் போட்டியில் கம்பு சுற்றி அசத்திய மாணவர்கள்
/
'அ' குறுமைய சிலம்பம் போட்டியில் கம்பு சுற்றி அசத்திய மாணவர்கள்
'அ' குறுமைய சிலம்பம் போட்டியில் கம்பு சுற்றி அசத்திய மாணவர்கள்
'அ' குறுமைய சிலம்பம் போட்டியில் கம்பு சுற்றி அசத்திய மாணவர்கள்
ADDED : ஜூலை 17, 2025 10:26 PM

கோவை; பள்ளி கல்வித் துறை சார்பில் கோவை மாவட்ட 'அ' குறுமைய விளையாட்டு போட்டிகள் இரு நாட்கள் நடந்தது. தேவாங்க பள்ளியில் மாணவியருக்கான சிலம்பம் போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
நேற்று மாணவர்களுக்கான பிரிவில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், 14 வயதுக்குட்பட்டோர்(30 கிலோ எடைக்கும் குறைவான) பிரிவில் ஜெகதீஷ்வரன், தர்சன், அகிலன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
அதேபோல், 35 கிலோவுக்கும் குறைவான எடை பிரிவில், ஹர்ஷித், சுதர்ஷன் ராஜ், யாதேஷ் ஆகியோர், 40 கிலோ பிரிவில், சுதர்ஷன், ரோகித், சபரி ஆகியோரும், 40 கிலோவுக்கும் அதிகமான பிரிவில், விஜித், பிரணவ், கிருஷ்ணன் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
ஒற்றை கம்பு வீச்சு பிரிவில் ஸ்ரீராம், பத்ர பூஷனா, சிவகார்த்திகேயன் ஆகியோரும், இரட்டை கம்பு வீச்சு பிரிவில், கமலேஷ், தனுஷ்குமார், ஆதர்வா ஆகியோரும், 17 வயதுக்குட்டோர் பிரிவில்(30 கிலோவுக்கு குறைவான) ஹரிஷ் வெங்கடேஷ், தர்ஷன், விஷ்ணு ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
தொடர்ந்து, 35 கிலோவுக்கு குறைவான பிரிவில், பாலகுமரன், அரிஷ், மணிகண்டன் ஆகியோரும், 45 கிலோ பிரிவில், தமிழ் செல்வன், மிதுன் கார்த்திக், கிஷோர்குமார் ஆகியோரும், 50 கிலோ பிரிவில் கவின் கார்த்திகேயன், ராகுல், பிரபாகர் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
ஒற்றை கம்பு வீச்சில் தமிழ் செல்வன், காளிமுத்து, ஸ்ரீனுமந்த் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும், இரட்டை கம்பு வீச்சில் ஸ்ரீராஜ், மனோஜ் ஆகியோர் முதல் இரு இடங்களையும் பிடித்தனர். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.