/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஐடியாத்தான்' போட்டி; அசத்திய மாணவர்கள்
/
'ஐடியாத்தான்' போட்டி; அசத்திய மாணவர்கள்
ADDED : செப் 16, 2025 10:31 PM

கோவை; பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான, ஐடியாத்தான் போட்டி நடந்தது.
கல்லுாரியின் முன்னாள் மாணவரும், ஏசியன் அசோசியேட்ஸ் கோவை நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான சிவசங்கர், ''பொறியியல் மாணவர்கள் மக்களுக்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்,'' என்றார்.
ஓசோடெக் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் நிறுவனர் பரதன், ''இன்று உருவாக்கும் தொழில்நுட்பங்கள், சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்,'' என்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி, புதிய கண்டுபிடிப்புகள் இயக்குனர் பிரின்ஸ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.