/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கரிஷ்மா' பட்டம் பெற்ற மாணவர்கள்
/
'கரிஷ்மா' பட்டம் பெற்ற மாணவர்கள்
ADDED : செப் 30, 2025 12:54 AM

கோவை; கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியில் மாணவர்களின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் வகையில், 'கரிஷ்மா' எனும் கலைவிழா நடந்தது. பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியின் செயலர் யசோதா தேவி தலைமை வகித்தார்.
இதில் பின்னணி பாடகர்கள் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ராஜகணபதி, ராஜில்ராஜ் ஆகியோர் பாடல்களை பாடி அசத்தினர். கோவை, ஈரோடு, திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 60க்கும் மேற்பட்ட கல்லுாரிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஓவியம், புகைப்படம் எடுத்தல், பட கவிதை, விளம்பரப்படப்பிடிப்பு, வினாடி-வினா, குழு மற்றும் தனி நடனம், இசைக்குழு என பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், ரொக்கபரிசு என ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை மாணவர் கார்த்தி, வி.எல்.பி.ஜானகியம்மாள் கல்லுாரி மாணவர் விஷ்ணுரத்திஷ், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி மாணவர் லக் ஷன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. முதல்வர் ஹாரத்தி, விருந்தினர் புவியரசு ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.