/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமிர்தா கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்
/
அமிர்தா கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்
ADDED : மார் 20, 2025 05:46 AM

கோவை : அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலையின் இன்னோவேஷன் கவுன்சில் ( ஐ.ஐ.சி.,) மற்றும் ஒ.எஸ்.ஏ., பிரிவுகள் சார்பில், 'ஜெனிசிஸ்' என்ற, பள்ளி மாணவர்களுக்கான திட்டக் கண்காட்சி நடத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, 125க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, 35க்கும் மேற்பட்ட புதுமையான திட்டங்களைச் சமர்ப்பித்தனர்.
இக்கண்காட்சியில். மெய்நிகர் மருத்துவர் தசை சென்சார், மறதி நோயாளிகளுக்கான உதவி, ஸ்மார்ட் வீடு மற்றும் குப்பைத் தொட்டி என, பல்வேறு கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். அடல் டிங்கரிங் லேப் கொண்ட பள்ளிகள் பிரிவில், தாவர வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான கண்டுபிடிப்புக்காக, யுவபாரதி பப்ளிக் பள்ளியும், லேப் இல்லாத பள்ளிகள் பிரிவில், ரிச்சார்ஜபுள் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக, நல்லாம்பாளையம் அமிர்தா வித்யாலயமும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தன.
இந்நிகழ்வில் அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் மாணவர் விவகாரங்களுக்கான இணை டீன் மகாதேவன், ஐ.ஐ.சி., தலைவர் பிரசாந்த், மாணவர் நலப்பேராசிரியர் ஆதர்ஷ், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ராமகுரு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.