/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களே...கைவண்ணம் காட்டுங்க!
/
மாணவர்களே...கைவண்ணம் காட்டுங்க!
ADDED : ஜூலை 13, 2025 11:25 PM
கோவை; அரசு பள்ளி மாணவர்கள், வாசிப்பு இயக்க புத்தகங்களுக்காக தங்கள் படைப்புகளை வழங்குமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தட்டுத்தடுமாறி வாசிக்கும் குழந்தைகளையும் தன்னம்பிக்கையோடு வாசிக்க வைக்க, அரசுப் பள்ளிகளில் 'வாசிப்பு இயக்கம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் குழந்தைகளின் வாசிப்பு நிலைக்கு ஏற்ப 'நுழை', 'நட', 'ஓடு', 'பற' என நான்கு கட்டங்களாகப் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதற்காக, 174 புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மொத்தம் 250 புத்தகங்கள் வெளியிட திட்டமிட்ட நிலையில், மீதமுள்ள 76 புத்தகங்கள் முழுமையாக மாணவர் படைப்புகளால் உருவாக்கப்படவுள்ளன. இதற்காக அரசு பள்ளி மாணவர்களின் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
இந்த மாணவர் படைப்புகளை, ஆசிரியர்கள் வரும் 16ம் தேதி வரை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.