/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடி, பள்ளிகளில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு
/
அங்கன்வாடி, பள்ளிகளில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : செப் 22, 2024 11:51 PM

வால்பாறை: வால்பாறையில் உள்ள அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வால்பாறை அடுத்துள்ள, அட்டகட்டி அங்கன்வாடி மையத்தில், பொள்ளாச்சி சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா திடீர் ஆய்வு செய்தார். அப்போது, மையத்தில் குழந்தைகள் இல்லாதது குறித்து விளக்கம் கேட்டார்.
அதன்பின், வால்பாறை நகரில் உள்ள அங்கன்வாடி மையங்களையும் ஆய்வு செய்து, குறைகளை கேட்டறிந்தார். எம்.ஜி.ஆர்.,நகர் பழங்குடியின மாணவர்கள் படிக்கும் உண்டு உறைவிடப்பள்ளியில், மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா கூறியதாவது:
வால்பாறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்தோம். பழங்குடியின மாணவர்கள் படிக்கும் பள்ளியில், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும், மாணவர்களின் குறைகள் குறித்தும் கேட்டறிந்தோம்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கன்வாடி மையங்களில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டு, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நுாலகத்தின் முன்பாக ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினார்.