/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய விலையில் இடு பொருட்கள்; வேளாண் இணை இயக்குனர் அறிவிப்பு
/
மானிய விலையில் இடு பொருட்கள்; வேளாண் இணை இயக்குனர் அறிவிப்பு
மானிய விலையில் இடு பொருட்கள்; வேளாண் இணை இயக்குனர் அறிவிப்பு
மானிய விலையில் இடு பொருட்கள்; வேளாண் இணை இயக்குனர் அறிவிப்பு
ADDED : ஏப் 04, 2025 11:02 PM
பொள்ளாச்சி; 'வேளாண் உழவர் நலத்துறையின் கீழ், 2025 -26ம் ஆண்டுக்கான இடுபொருட்கள் மானிய விலையில் வழங்க உத்தரவு பெறப்பட்டுள்ளது,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி அறிக்கை வருமாறு:
கோவை மாவட்டத்தில் வேளாண் உழவர் நலத்துறையின் கீழ், 2025 - 26ம் ஆண்டுக்கு தேவையான இடுபொருட்களை, விதை கிராம திட்டம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் தேசிய உணவு ஊட்டச்சத்து திட்டங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.
சித்திரை பட்டத்துக்கு தேவையான பயறு வகை, சோளம், நெல் விதைகள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், நுண்ணுாட்ட கலவைகள் அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், நெல் - 3,850 கிலோ, சோளம் - 12,183 கிலோ, உளுந்து - 18,779 கிலோ, நிலக்கடலை - 18,939 கிலோ, தட்டை பயறு - 2,004, கம்பு - 1,556, பச்சைப்பயறு - 1,210 கிலோ வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் உள்ளது.
மேலும், 12.5 டன் மக்கிய தொழு உரங்களுடன், 2.5 கிலோ சூடோமோனாஸ் (ம) டிரைக்கோடெர்மா விரிடியினை நன்கு கலந்து, கடைசி உழவில் இடுவதால் பயிர்களை தாக்கும் அழுகல், தண்டழுகல் போன்ற நோய்களை கட்டுப்படுத்தலாம்.
விதைப்பதற்கு முன்பு விதைகளை அசோஸ்பைரில்லம் (அ) பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களுடன், அரிசி கஞ்சியினை கலந்து விதை நேர்த்தி செய்து, 30 நிமிடம் கழிந்து விதைக்கலாம். விரிவாக்க மையங்களில் இடு பொருட்களின் இருப்பு நிலையினை உழவன் செயலி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.