/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொண்டைக்கடலை சாகுபடிக்கு மானியம்
/
கொண்டைக்கடலை சாகுபடிக்கு மானியம்
ADDED : அக் 08, 2025 11:29 PM
கோவை; வேளாண் இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி அறிக்கை:
கோவை மாவட்டத்தில், 6,483 ஹெக்டரில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில், 1053 ஹெக்டர் கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. கொண்டைக்கடலை விதைப்புக்கு மட்டுமே மழை தேவை.
என்.பெக்.47 மற்றும் 49 ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. இரண்டும் 105 நாட்கள் வயதுடையவை. முறையே ஏக்கருக்கு 10 மற்றும் 8 குவிண்டால் மகசூல் தரவல்லது.
கோவையில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் பயறு வகைத் திட்டத்தின் கீ ழ், நுண்ணுாட்டங்கள், இடுபொருட்கள் மற்றும் செயல்விளக்கத் திடல்களுக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கிணத்துக்கடவு, பெ.நா.பாளையம், பொள்ளாச்சி, சர்க்கார் சாமக்குளம் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களையோ, தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்ட ஆலோசகரையோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.