தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தட்டைப்பயிறு விதைக்கு மானியம்

தட்டைப்பயிறு விதைக்கு மானியம்

தட்டைப்பயிறு விதைக்கு மானியம்


UPDATED : அக் 08, 2026 04:26 PM

ADDED : அக் 08, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 04:26 PM ADDED : அக் 08, 2026 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர்: வட்டார வேளாண் உதவி இயக்குனர் சக்திவேல் கூறியதாவது:

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வேளாண்துறை சார்பில், பயறு வகை தன்னிறைவு இயக்கமான, மத்திய திட்ட நிதியின் கீழ், மானிய விலையில் தட்டை பயறு விதைகள் வழங்கப்படுகிறது.

தொண்டாமுத்தூர், ஆலாந்துறை வேளாண் விரிவாக்க மையங்களில், வம்பன் 3 மற்றும் 4 ரக தட்டை பயறு விதை இருப்பு வைத்துள்ளனர். வம்பன் ரக விதைகள் வேளாண்மை பல்கலையால் வெளியிடப்பட்ட உயர் ரக மகசூல் தட்டை ரகமாகும்.

புரட்டாசி மற்றும் சித்திரை பட்டத்திற்கு ஏற்றது. 75 முதல் 80 நாட்களில் அறுவடைக்கு வரும். ஏக்கருக்கு, 1,014 முதல் 1,600 கிலோ வரை மகசூல் கிடைக்கும். மஞ்சள் மொசைக் நோயை எதிர்த்து வளரும் தன்மையுடையது.

கிலோ 128 ரூபாய் விலையுள்ள விதைகள், 60 ரூபாய் மானியம் போக, 68 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us