ADDED : டிச 28, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;காரமடை மெயின் ரோட்டில் திடீரென ஓடும் காரில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சியாம், 42. இவர் நேற்று காலை காரில் ஊட்டியில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார் காரமடை மெயின் ரோட்டில், பஸ் ஸ்டாண்டு அருகே வந்த போது, காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. சுதாரித்து கொண்ட சியாம் உடனே காரை வீட்டு கீழே இறங்கினார். பின் காரின் முன்பகுதியில் தீ பற்றியது.
அக்கம், பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அனைத்தனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து, காரமடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

