/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் திடீர் காற்று, கனமழை; இன்றும் தொடரும் என்பதால் மகிழ்ச்சி
/
கோவையில் திடீர் காற்று, கனமழை; இன்றும் தொடரும் என்பதால் மகிழ்ச்சி
கோவையில் திடீர் காற்று, கனமழை; இன்றும் தொடரும் என்பதால் மகிழ்ச்சி
கோவையில் திடீர் காற்று, கனமழை; இன்றும் தொடரும் என்பதால் மகிழ்ச்சி
ADDED : மே 05, 2025 06:33 AM

கோவை; பலத்த சூறைகாற்றுடன் கொட்டிய கனமழையால், பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை, நீலகிரி, அரியலுார், பெரம்பலுார், கரூர், திருச்சி, கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில், நேற்று (மே 4) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கோவையில் நேற்று காலை முதல் வெய்யிலின் தாக்கம் அதிகம் இருந்தது. நேற்று மாலை, 5:30 மணிக்கு மேல் வானம் கருமேகங்களால் சூழப்பட்டு இருண்டது.
சூறைக்காற்று வீசியது. கோவை அவிநாசி ரோடு, அவிநாசி மேம்பாலம், திருச்சி ரோடு, காந்திபுரம் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால், வாகன ஓட்டிகளும் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து கனமழை பெய்தது.
கோவை காந்திபுரம், வடவள்ளி, பி.என்.புதுார், மணியகாரன்பாளையம், மருதமலை ரோடு, வேளாண் பல்கலை, சங்கனுார் ரோடு, சாய்பாபா காலனி, தடாகம் ரோடு, கணபதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
ரோட்டில் தண்ணீர் அதிகளவு ஓடியது. வாகனங்கள் இயக்கம் தடைபட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.