/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய கராத்தே போட்டியில் சாதித்த சுகுணா மாணவி
/
தேசிய கராத்தே போட்டியில் சாதித்த சுகுணா மாணவி
ADDED : டிச 17, 2024 11:56 PM

கோவை; காளப்பட்டி, நேரு நகரில் உள்ள சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவி, ஹரியானாவில் நடந்த தேசிய கராத்தே போட்டியில், இரண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார்,
முதலாமாண்டு பி.எஸ்.சி., கணினி அறிவியல் மாணவி ஸ்ரீமதி, ஹரியானாவில் நடந்த தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். யூ 17 கராத்தே மற்றும் யூ 17 பளு துாக்கும் போட்டியில் கலந்து கொண்ட அவர், இரண்டிலும் தங்க பதக்கங்களை வென்று, சாதனை படைத்துள்ளார்.
கல்லுாரியின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா, செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குனர் சேகர், முதல்வர் ராஜ்குமார், உடற்பயிற்சி பேராசிரியர் சுப்பையா மற்றும் பேராசிரியர்கள், பாராட்டினர்.