/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரள எல்லையில் தொடரும் கண்காணிப்பு
/
கேரள எல்லையில் தொடரும் கண்காணிப்பு
ADDED : ஜூலை 21, 2025 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; காரமடையில் உள்ள கேரளா மாநில எல்லை பகுதியான கோபனாரியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக காரமடை அருகே உள்ள கேரளா மாநில எல்லைப் பகுதியான கோபனாரியில், சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். இப்பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.