/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டாமுத்தூர் பகுதியி।ல் விதைப்பண்ணைகளில் ஆய்வு
/
தொண்டாமுத்தூர் பகுதியி।ல் விதைப்பண்ணைகளில் ஆய்வு
தொண்டாமுத்தூர் பகுதியி।ல் விதைப்பண்ணைகளில் ஆய்வு
தொண்டாமுத்தூர் பகுதியி।ல் விதைப்பண்ணைகளில் ஆய்வு
ADDED : நவ 17, 2025 01:40 AM
கோவை: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், ஐ.ஆர்., 20, பி.பி.டி., 5204, கோ 51, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, ஏ.டி.டி, 37, கோ 55, ஏ.எஸ்.டி., 16, சி.ஆர்., 1009 ஆகிய 8 ரகங்களில் நெல் விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விதைப்பண்ணைகள் விதைச் சான்று அலுவலர்களால், முக்கிய பருவங்களில் வயலாய்வு செய்து, சான்றளிக்கப்படும்.
இதன்படி, மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குநர் மாரி முத்து, விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து, கலவன்கள் எண்ணிக்கை, பிற ரக பயிர்கள் கலப்பு மற்றும் குறித்தறிவிக்கப்பட்ட நோய் ஆகியவற்றை அவ்வப்போது நீக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, விதைச்சான்று அலுவலர்கள் துளசிமணி, பாரதி, சதாசிவம், உதவி விதை அலுவலர் சுப்ரமணி ஆகியோர் உடனிருந்தனர்.