/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: செப்., இறுதிக்குள் முடிக்க திட்டம்

ADDED : ஆக 11, 2025 06:40 AM
கோவை; கோவை மாவட்டத்தில் டி.என்.ரைட்ஸ் திட்டத்தின் கீழ் வீடுவீடாக மேற்கொள்ளப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி, 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப, கொள்கை முடிவுகளை வகுக்கவும், திட்டங்களை ஏற்படுத்தும் வகையில் கணக்கெடுப்பு பணிகள் டி.என்., ரைட்ஸ் திட்டத்தின் கீழ் நடந்துவருகிறது.
கடந்த, இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு பணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிகள் துறை திட்ட அலுவலர் சுந்தரேசன் கூறியதாவது:
கடந்த ஜூன் முதல் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. ஊராட்சி, கிராமப்புற பகுதிகளில் கணக்கெடுப்பு பணி பெரும்பாலும் முடிந்துள்ளது. நகர்புறங்கள், மாநகராட்சி பகுதிகளில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கோவையில், 11லட்சத்து 53 ஆயிரம் வீடுகள் இலக்கு வைத்து கணக்கெடுப்பு பணிகள் நடக்கின்றன. இதில், 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 60 சதவீத பணிகள், செப்., இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.