/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
58 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று நிறுத்தி வைப்பு
/
58 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று நிறுத்தி வைப்பு
ADDED : மே 20, 2025 11:32 PM
மேட்டுப்பாளையம்; பள்ளி வாகனங்களில் கேமராக்கள், சரியாக வேலை செய்யாமல் இருந்ததால், 58 வாகனங்களுக்கு சான்றுகள் நிறுத்தி வைக்கப்பட்டன, என, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில், பள்ளி வாகனங்களை, ஆண்டுக்கு ஒருமுறை, அதன் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணிகள், நடைபெற்று வருகின்றன.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து வருகிறார். மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட, மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், வீரபாண்டி பிரிவு, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள, 58 தனியார் பள்ளிகளில், 460 பள்ளி வாகனங்கள் உள்ளன.
இந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள், இம்மாதம் மூன்றாம் தேதியிலிருந்து நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் கூறுகையில்,முதல் கட்ட ஆய்வில், 58 வாகனங்களில் கேமராக்கள் சரியாக வேலை செய்யாமல் இருந்தது. அதை சரி செய்து வரும்படி திருப்பி அனுப்பப்பட்டது. இதில், 30 வாகனங்கள் சரி செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இன்னும், 28 வாகனங்கள் சரி செய்யாமல் உள்ளன. பள்ளி வாகனங்களில் உள்ளேயும், வெளியேயும், ரிவர்ஸ் பார்த்தல் ஆகிய மூன்று இடங்களில் உள்ள, கண்காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்கிறதா என, மிக முக்கியமாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அதை சரி செய்து வரும்படி சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, என்றார்.