தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் ‘டேக்ட்’ வேண்டுகோள்

மின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் ‘டேக்ட்’ வேண்டுகோள்

மின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் ‘டேக்ட்’ வேண்டுகோள்


UPDATED : அக் 28, 2026 05:12 PM

ADDED : அக் 28, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 05:12 PM ADDED : அக் 28, 2026 05:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மின்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டேக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கோவையில் 50,000க்கும் மேற்பட்ட குறு சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதிகரித்து வரும் மின் தேவைக்கு ஏற்ப மின்கட்டமைப்பு இல்லை. சீரான மின்சாரம் கிடைப்பதில்லை. நெருக்கடிக்கு தள்ளப்படுகிறோம். கோடை காலத்தில் மின்தடை ஏற்படாமல் இருக்க அனைத்து 110 கே.வி. துணை மின்நிலையங்களில், கூடுதல் மின்பாதை அமைக்க வேண்டும். எச்.டி.மின்பாதைகளை, அதிக மின்சாரம் தாங்குமளவுக்கு தரம் உயர்த்த வேண்டும்.

மாநகர், பேரூராட்சி, பஞ்சாயத்து பகுதிகளின் மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும். பழுது சமயங்களில், அந்த மின் பாகத்தை மட்டும் தனிமைப்படுத்தி மற்றவர்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்.

மின்வாரியம் அமைத்த ரிங் மெயின் யூனிட், ஆட்டோமேடிக் ஸ்விட்ச் பராமரிப்பில் இல்லை. இதை சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட எல்.டி.சி.டி மின் இணைப்புகள் உள்ளன.

நிலைக்கட்டணம் ஒரு கிலோவாட் கட்டணத்தை ரூ.35 இல் இருந்து ரூ.112 ஆக உயர்த்தினர். தற்போது ரூ.162 கட்டணம் செலுத்துகிறோம். அதை மீண்டும் ரூ.35 ஆக குறைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us