/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சிலைகளை ஆய்வு செய்த தாசில்தார்
/
விநாயகர் சிலைகளை ஆய்வு செய்த தாசில்தார்
ADDED : ஆக 25, 2025 09:38 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே விநாயகர் சிலைகளை தாசில்தார் ஆய்வு செய்தார்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் சின்னக்கள்ளிப்பட்டி கிராமத்தில், ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன. அங்கு மேட்டுப்பாளையம் தாசில்தார் ஆய்வு செய்தார்.
சிலைகள் செய்தவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார் பின்பு தாசில்தார் ராம்ராஜ் கூறுகையில்,விநாயகர் சிலைகள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மாவில் செய்யப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அவ்வாறு இல்லாமல் கிழங்கு மாவிலும், பேப்பரிலும் செய்துள்ளது தெரியவந்தது, என்றார்.
சிலைகள் செய்யும் பணிகளில் ஈடுபட்ட ஹிந்து முன்னணியினர் கூறியதாவது:
அனைத்து விநாயகர் சிலைகளும் தண்ணீரில் எளிதில் கரையும் வகையில், கிழங்கு மாவு, கல் மாவு, காகித கூழ், குச்சிகள் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளன. மூணரை அடியில் இருந்து, 9 அடி உயரம் வரை, 1500க்கும் மேற்பட்ட சிலைகள் செய்யப்பட்டன.
இந்த சிலைகள் ஈரோடு, நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம் ஆகிய ஹிந்து முன்னணி நிர்வாகிகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. ஹிந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் அனைத்து பணிகளும் நடைபெற்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.