/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுங்க; 'டாஸ்மாக்' சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ADDED : ஏப் 10, 2025 11:17 PM

கோவை; 'டாஸ்மாக் பணிகளில் தலையிடும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
'டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். கேரளாவில் மதுக்கூடமின்றி, கம்ப்யூட்டர் வழியாக விற்பனை நடக்கிறது. தமிழகத்தில் மதுக்கூட கட்டுப்பாட்டில் மதுக்கடைகள் நடப்பதால் முறைகேட்டுக்கு வழிவகுக்கிறது. மதுக்கடைகள் தனித்து செயல்பட வேண்டும். இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தை சேர்ந்த மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் மதியழகன், கோவை மண்டல செயலாளர் வீராசாமி, மாவட்ட தலைவர்கள் தேனீஸ்வரன், பத்மனாபன், வடக்கு மாவட்ட பொருளாளர் சக்தி வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
சமூக நீதி அமைப்பு சாரா மற்றும் பொதுப்பணியாளர் சங்க மாநில தலைவர் பன்னீர்செல்வம் வாழ்த்திப் பேசினார்.