/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசாரம்
/
தமிழக பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசாரம்
ADDED : மார் 23, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : சூலுார் வட்டாரத்தில், தமிழக பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசார கூட்டங்கள் நடந்தன.
சூலுார் வட்டாரத்தில் தி.மு.க., சார்பில், பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசார கூட்டங்கள், சூலுார் பழைய பஸ் ஸ்டாண்ட், மதியழகன் நகர், கண்ணம்பாளையம், பாப்பம்பட்டி பிரிவு, சின்னியம்பாளையம், நீலம்பூர் உள்ளிட்ட இடங்களில் நடந்தன. தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். தலைமை கழக பேச்சாளர்கள், பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசினர்.
ஒன்றிய செயலாளர் மன்னவன், கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா, நகர செயலாளர்கள் கவுதமன், விஸ்வநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.